10 ஆண்டுகள் நிறைவு பெற்ற மதராசப்பட்டினம் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டது பாலிவுட் நடிகை தான் என்று இயக்குநரான ஏ. எல். விஜய் கூறியுள்ளார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மதராசப்பட்டினம். ஆர்யா மற்றும் எமி நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சானது. தமிழ் பையனுக்கும், இங்கிலீஷ் பெண்ணுக்கும் இடையேயான காதலையும், சுதந்திரத்திற்கு முன்னுள்ள காலகட்டத்தையும் கூறும் இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
இதிலுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே இன்றும் பேவரட்டாக உள்ளது. இந்நிலையில் இன்றுடன் 10 ஆண்டுகளான நிலையில், இயக்குநரான ஏ. எல். விஜய் இந்த படத்தினை குறித்த யாரும் அறியாத தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த படத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது எமி ஜாக்சன் இல்லையாம், பாலிவுட் நடிகையான வனேசா ஹெட்ஜன்ஸ் என்று கூறியுள்ளார். Spring breakers மற்றும் Bad boys for life fame ஆகிய படங்களில் புகழ்பெற்ற இவரை தொடர்பு கொள்ள வழியில்லாமையால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை. அதனையடுத்து மிஸ் வேல்ட் டீனை வென்றவரான எமி ஜாக்சனின் புகைப்படத்தை பார்த்தாகவும், அவர் ஆடிஷனின் கடைசி நாள் கலந்து கொண்டு படத்தில் இணைந்து கையெழுத்திட்டதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…