எதிர்நீச்சல் படத்தை குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறிய இயக்குநர்.!

Published by
Ragi

சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தின் இயக்குனர் துறை செந்தில் குமார் சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.

சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவரை நம்ம வீட்டு பிள்ளை என்று கூட ரசிகர்கள் அன்புடன் சொல்வார்கள். சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சிவகார்த்திகேயன் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின்  ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இவரது திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படம் என்றால் அது துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் தான். துரை செந்தில்குமார் பிரபல இயக்குநரான வெற்றிமாறன் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி  7ஆண்டுகள் ஆகிய நிலையில் இயக்குநர் பல சுவாரஸ்ய மான தகவலை பகிர்ந்துள்ளார்.  ஆம் எதிர்நீச்சல் படத்தின் கதையை இவர் முதலில் தனுஷிடம் ஆடுகளம் படத்தின் படப்பிடிப்பின் போது கூறி, அவருக்கும் அதை பிடித்து விட்டதாம். ஆனால் அதனையடுத்து தனுஷ் தான் சிவகார்த்திகேயன் இதில் நடித்தால் நல்லா இருக்கும் என்று கூறி வாய்ப்பை கொடுத்தாராம்.

மேலும் சிவகார்த்திகேயன் பாடிய ஒரு பாடல் கூட தனுஷூக்காக வைத்திருந்ததாம். மேலும் முதலில் இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தா மற்றும் அமலா பாலிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் அவர்கள் அப்போது கால்ஷீட் காரணமாக நடிக்கவில்லையாம். அதனையடுத்து தான் இந்த படத்தில் பிரியா ஆனந்த் நடித்ததாக தெரிவித்துள்ளார். 5கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எதிர்நீச்சல் திரைப்படம் சுமார் 30 கோடி வரை வசூல் செய்ததாக கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

19 minutes ago

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

1 hour ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

1 hour ago

விஜயை பரந்தூருக்கு வரவைத்த சிறுவன்.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…

2 hours ago

கொல்கத்தா மருத்துவர் கொலை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு!

கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …

2 hours ago

“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று  மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…

3 hours ago