எதிர்நீச்சல் படத்தை குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறிய இயக்குநர்.!
சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தின் இயக்குனர் துறை செந்தில் குமார் சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.
சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவரை நம்ம வீட்டு பிள்ளை என்று கூட ரசிகர்கள் அன்புடன் சொல்வார்கள். சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சிவகார்த்திகேயன் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இவரது திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படம் என்றால் அது துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் தான். துரை செந்தில்குமார் பிரபல இயக்குநரான வெற்றிமாறன் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி 7ஆண்டுகள் ஆகிய நிலையில் இயக்குநர் பல சுவாரஸ்ய மான தகவலை பகிர்ந்துள்ளார். ஆம் எதிர்நீச்சல் படத்தின் கதையை இவர் முதலில் தனுஷிடம் ஆடுகளம் படத்தின் படப்பிடிப்பின் போது கூறி, அவருக்கும் அதை பிடித்து விட்டதாம். ஆனால் அதனையடுத்து தனுஷ் தான் சிவகார்த்திகேயன் இதில் நடித்தால் நல்லா இருக்கும் என்று கூறி வாய்ப்பை கொடுத்தாராம்.
மேலும் சிவகார்த்திகேயன் பாடிய ஒரு பாடல் கூட தனுஷூக்காக வைத்திருந்ததாம். மேலும் முதலில் இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தா மற்றும் அமலா பாலிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் அவர்கள் அப்போது கால்ஷீட் காரணமாக நடிக்கவில்லையாம். அதனையடுத்து தான் இந்த படத்தில் பிரியா ஆனந்த் நடித்ததாக தெரிவித்துள்ளார். 5கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எதிர்நீச்சல் திரைப்படம் சுமார் 30 கோடி வரை வசூல் செய்ததாக கூறியுள்ளார்.