தளபதி விஜய்யும் இல்லை! சூர்யாவும் இல்லை! வெற்றிமாறன் இயக்கும் அடுத்த ஹீரோ இவர்தான்!

Default Image
  • வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா, விஜய் , சூரி என மூவரிடமும் கதை சொல்லி ஓகே செய்து வைத்துள்ளாராம். 
  • இதில் முதலில் கூறப்பட்ட சூரியின் படத்தைதான் இயக்க திட்டமிட்டுள்ளாராம். 

அசுரன் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு மிகவும் பிஸியான இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான். இவர் அடுத்து யாரை இயக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழும்பியுள்ளது.

இவர் சூரி, சூர்யா, விஜய் என மூவரிடமும் கதை கூறி ஓகே செய்து வைத்திருந்தார். இதில் முதலில் யாரை இயக்க உள்ளார் என கேட்கப்பட்டது. இதில் முதலில் சூரி படத்தை இயக்க உள்ளாராம். சிறிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார்.

அப்படத்தை மார்ச் மாதம் முடித்துவிட்டு, அடுத்து சூர்யா படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு 2021இல் தான் தளபதி விஜய் படத்தை இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் வெற்றிமாறனின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்