அச்சிலேற்ற முடியாத ஆபாச வார்த்தைகள்…..தனிப்பட்ட பிரச்சனைப் போல் சித்தரிப்பு- சீனுராமசாமி வேதனை
விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் மற்றும் அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் ட்வீட் செய்வதாக திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி பரபரப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக இருந்த 800 படத்தில் நடப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிப்பு கிளம்பியது.
மேலும் இதற்கு சினிதுறை மட்டுமின்றி அரசியல் வட்டத்திலும் எதிர்ப்புகள் அதிகரித்தது.எதிர்ப்பு வலுக்கவே முத்தையா முரளிதரன் இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய்சேதுபதிக்கு கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் படம் கைவிடப்பட்டது.நன்றி வணக்கம் என்று நடிகர் விஜய்சேதுபதி ட்விட் செய்தார்.இவ்வாறு சர்ச்சைகளால் முடிந்த நிலையில் தற்போது இயக்குநர் சீனுராமசாரி செய்தியாளர் சந்திப்பில் விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் வருகிறது.
அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் ட்வீட் செய்கின்றனர் என்று பரபரப்பு தெரிவித்தார்.மேலும் அவர் விஜய்சேதுபதி நலன் கருதியே 800 திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினேன்.
விஜய்சேதுபதி தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அறிவுறுத்தினேன்.இது தொடர்பாக எனது கருத்தை தெரிவித்தேன்
ஆனால் விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்தேன் என்று தொடர்ந்து எனக்கு மிரட்டல் வருகிறது. மிரட்டலில் அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் ட்வீட் செய்கின்றனர் என்று இயக்குநர் சீனுராமசாமி வேதனை தெரிவித்தார்.