மாநாடு சிம்புவிற்கு சிறந்த படமாக அமையும் – இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ஓபன் டாக்..!

மாநாடு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் சில விஷயங்களை கூறியுள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பிரேம் ஜி, கருணாகரன், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் மாநாடு படத்தின் டீசரை வெளியிட்டனர். அந்த டீசர் தற்போது வரை யூடியூபில் 4 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் படத்தை பற்றி பேசுகையில் ” இன்றைய காலகட்டத்தில் இந்த மாநாடு திரைப்படம் மிகவும் முக்கியமான திரைப்படம். நடிகர் சிம்புவிற்கு இந்த திரைப்படம் சிறந்த படமாக இருக்கும். படத்தில் நான் முக்கியமான காதபத்திரத்தில் நடித்துள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025