நடிகை கயல் ஆனந்தியை கமலி From நடுக்காவேரி திரைப்படத்தின் இயக்குனரான ராஜசேகர் துரைசாமி பாராட்டி சில விஷியங்களை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆனந்தி. கயல் ,சண்டி வீரன்,பரியெறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் தனது காதலனான சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், தெலுங்கில் ஸோம்பி ரெட்டி போன்ற சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் திரைப்படம் ‘கமலி From நடுக்காவேரி’ . இந்த படத்தினை ராஜசேகர் துரைசாமி இயக்கியுள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி இயக்குனர் ராஜசேகர் துரைசாமி கூறுகையில், “இது எனது முதல் திரைப்படமாகும். நான் வாழ்வில் சந்தித்த விஷயங்கள்தான் இந்த படத்தில் திரைக்கதையாக மாற்றியுள்ளேன். இந்த திரைப்படம் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வரும் பெண் சமூகத்தில் பெண்கள் மீது வைக்கப்படும் வரம்புகளைத் தாண்டி கல்வியை பெறுவது தான் முழு ஆற்றலை அறிந்து கொள்வதும் தான்.
இந்த திரைப்படம் சீரியசான கருத்து சொல்லும் படமாக இருக்காது காதல் மற்றும் நகைச்சுவை அனைத்தும் கொண்ட மென்மையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். என் கதைக்கான பொருத்தமான நடிகையை நான் தேடிக் கொண்டிருக்கும் பொழுது கயல் ஆனந்தி இந்த திரைப்படத்திற்கு மிக சரியானவர் என்று தோன்றினார். கயல் ஆனந்தியின் திறமையை இதுவரை முழுமையாக வெளியே வரவில்லை. அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய நடிகை. கயல் ஆனந்தியை இந்த படம் வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும். இந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து அனைவரும் வியந்து போவீர்கள் என்றும் கூறியுள்ளார்.
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…