இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக அட்டகத்தி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்.
தமிழ் சினிமாவில், அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பா.ரஞ்சித். தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து சார்பேட்டா பரம்பரை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் , இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேமில், வருகின்ற 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் காத்துள்ளனர்.
இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவி வருகிறது. அதாவது இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக அட்டகத்தி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பா.ரஞ்சித் நீலம் புரடொக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…