“உலகமே கொரோனா தொற்றுக்கு அழிந்துக் கொண்டிருக்கிறது;ஆனால்,இந்த சாதி வெறியர்களின் வன்மம் மட்டும் அடங்குவதாக இல்லை”- இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்..!

Default Image

விழுப்புரம் ஒட்டனந்தலில் கோவில் திருவிழாவை முன்பே நடத்தியதற்காக,பட்டியல் இனத்தை சேர்ந்த மூன்று முதியவர்களை, ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த சம்பவத்திற்கு எதிராக இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்,மறுபுறம் சாதிக் கொடுமைகளும் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில்,விழுப்புரம் ஒட்டனந்தலில் கோவில் திருவிழாவை முன்பே நடத்தியதற்காக, பட்டியல் இனத்தை சேர்ந்த மூன்று முதியவர்களை, ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

இதனையடுத்து,நடந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும்,இவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி தகவல் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,இயக்குநர்.பா.ரஞ்சித் இந்த சம்பவத்தை கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,”உலகமே கொரோனா தொற்றுக்கு அழிந்து கொண்டிருக்கிறது, ஆனால் இந்த சாதிவெறியர்களின் வன்மம் மட்டும் அடங்குவதாய் இல்லை!! தமிழக அரசு அடக்க முயற்சிக்குமா??”,என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்