செக் மோசடி வழக்கில் 6 மாத சிறை.! மேல்முறையீடு செய்யும் லிங்குசாமி.!
செக் மோசடி வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்று இயக்குநர் லிங்குசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த திரைப்பட தயரிப்பு நிறுவனமான பிவிபி, காசோலை மோசடி வழக்கில் பிரபல தமிழ் இயக்குனர் லிங்குசாமி மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேல்முறையீடு செய்யும் லிங்குசாமி:
தற்போது, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக லிங்குசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது.
மேலும், அவர்கள் கொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
— Lingusamy (@dirlingusamy) April 13, 2023
இயக்குநர் லிங்குசாமியின் செக் மோசடி:
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு பிவிபி கேபிடல் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து “எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக ரூ.1.03 கோடி கடன் வாங்கியது. அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மீதும் பிவிபி கேபிடல் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.