பாரிஸ் ஜெயராஜ் படத்தின் புரோமோஷனுக்காக நடைபெற்ற பிரஸ் மீட்டில் இயக்குனர் உளறியதாகவும் ,அதனை சந்தானம் சமாளித்ததாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தை இயக்குனர் ஜான்சன் கே இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்
இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதை தொடர்ந்து அதன் புரோமோஷனுக்காக பாரிஸ் ஜெயராஜ் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள் .இதில் இயக்குனர் வரமாட்டார் என்றும், ஏனெனில் வரும் வழியில் இயக்குநரின் கார் விபத்தில் சிக்கியதாகவும் நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே அறிவித்திருந்தார்கள்.
ஆனால் நிகழ்ச்சி முடிவதற்கு முன் அரங்கிற்கு வந்து பேசிய இயக்குநர் ஜான்சன் கே, பத்திரிகைகளிடம் பேசுகையில் தெளிவாக இல்லை என்றும் ,உளறி கொண்டு தான் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.அதிலும் அவர் நான் ஒர்த் இல்ல என்று வார்த்தையையே மீண்டும் மீண்டும் கூறி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி படத்தின் ஹீரோயினான அனைகாவின் பெயரை ஆயா உள்ள பாட்டி என்று கூறியதும் ,அதனை தொகுப்பாளர் திருத்தியதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு படக்குழுவினர் பெயரை கூற சரியாக கூறாமல் உளறி கொண்டிருந்த இயக்குனர் மீண்டும் மீண்டும் நான் ஒர்த் இல்ல என்று கூறிய போது பத்திரிக்கையாளர் தரப்பிலிருந்து நீங்கள் ஒர்த் இல்ல ஒர்த் இல்லனு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே, மக்களும் படம் ஒர்த் இல்லனு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க என்று கேள்வி கேட்டனர்.அதற்கு யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக போகட்டும் எனக்கு கவலை இல்லை என இயக்குனர்பதில் அளித்துள்ளார்.உடனடியாக சுதாரித்து கொண்ட சந்தானம், இயக்குனரின் கார் விபத்துக்கு உள்ளானதால் குழப்பத்தில் உள்ளார் என்று கூறி சமாளித்துள்ளார் . இயக்குனரின் இந்த செயல் அனைவரையும் முகம் சுருங்க வைத்துள்ளது . இயக்குனரின் கார் விபத்தில் சிக்கியதற்கும் ,அவர் பேட்டியில் உளறி கொட்டியதற்கும் காரணம் என்னவாக இருக்கும் என்று பலர் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…