நடிகர்கள் ஒப்பந்தம் செய்த சம்பளத்திலிருந்து 30 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்திருந்தார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர்கள் ஒப்பந்தம் செய்த சம்பளத்திலிருந்து 30 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,.ரூ.10 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது சம்பளத்தில் 30% விட்டுக்கொடுக்க வேண்டும்.“இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது திரைக் கலைஞர்களின் கடமை அல்லவா” . தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத் துறையில் தாமே முன்வந்து 30% – 50% சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.இனி ஒப்பந்தம் செய்து கொள்ளும் படங்களுக்கு எனது இந்த வேண்டுகோள் பொருந்தாது .ஏற்கனவே ஒப்பந்தம் செய்த தொழில் நுட்ப கலைஞர்களும் 30% சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…