இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்னிமா பாக்கியராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் மற்றும் நடிகருமான கே. பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவியான பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனை அவரது மகன் மற்றும் நடிகருமான சாந்தனு பாக்கியராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் ” என் பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…