திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த 20ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. பிப்.,21ந் தேதி பூச்சொரிதல் விழாவும்,பிப்., 23ந் தேதி சாட்டுதலும் வெகுச்சிறப்பாக நடந்தது.இதைத் தொடர்ந்து மாசித்திருவிழாகொடியேற்றம் நடந்தது.
விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை மற்றும் திருமாங்கல்யம் சாத்துபடி செய்தபின்னரே இந்த கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படியே திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் தலைமையில் சபா மண்டபத்திலிருந்து தயாருக்கு சாத்துபடி செய்யப் படும் மஞ்சள் புடவை மற்றும் திருமாங்கல்யம் ஆகியவைகளை மேளதாளத்தோடு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முக்கிய ரதவீதிவழியே வலம் வந்து கோவிலை அடைவர்.அதன்படி சரியாக மதியம் 12 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பெண்கள் பக்தி பரவசத்தில் ஓம்சக்தி, பராசக்தி என்றவாறு கோஷங்களை எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், விஸ்வகர்ம அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சங்க செயலாளர் சந்தானம், இணை செயலாளர் சின்னு, சங்க நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…