விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி..!!

விஷாலின் 31 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கவுள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதுமட்டுமில்லாமல் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
விஷாலின் 31 வது படத்தை இயக்குனர் பா சரவணன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் டிம்பிள் ஹயாதி விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…
March 10, 2025
நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
March 10, 2025