திகில் கதையுடன் மீண்டும் மிரட்ட வருகிறது டிமான்டி காலனி -2 .?

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். டிமான்டி காலனி. திகில் கலந்த கதையை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.
இந்த திரைப்படத்தில் ஆர்ஜ் ரமேஷ், கலையரசன், எம்எஸ் பாஸ்கர், சிங்கம்புலி, யோகிபாபு, அருண்ராஜா காமராஜ், என பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் கேபா ஜெர்மியா பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். பின்னணி இசை எசு. சின்னா இசையமைத்திருந்தார்.
இப்படத்தை பார்த்த அனைவருக்கும் திரில்லர் அனுபவம் கொடுத்து இருக்கும். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து கோப்ரா திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.