வகை வகையான ரசம் தயரிக்க உதவும் பழங்கள் யாவை?

Default Image

தென்னிந்தியர்களை பொருத்தவரை என்ன தான் அறுசுவை உணவை உண்டாலும், அவர்களின் பசி உணர்வு திருப்தி அடைய கட்டாயம் அவர்கள் நாடும் ஒரு விஷயம் என்ன என்றால் அது ரசம் தான். பெரும்பாலான தென்னிந்திய இல்லங்களில் ரசம் இல்லாமல் ஒரு நாளும் கழியாது.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உணவான ரசத்தை பலரும் புளி மற்றும் தக்களி கொண்டு மட்டுமே இதுவரை சமைத்து வருகின்றனர். இந்த பதிப்பில் பழ வகைகளை வைத்து எப்படி ருசியான வகை வகையான ரசம் செய்வது என்று படித்து அறியலாம் வாருங்கள்..!

தர்பூசணிப்பழ ரசம்.!

தர்பூசணிப்ப்பழ ரசம் பெயரே வித்தியாசமாக உள்ளது அல்லவா! ஆம் நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணிப்பழம் கொண்டு தயாரிக்கப்படும் ரசம் மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த ரசத்தை சௌசௌ பொறியல், சாதம், கீரை சாம்பார் இவற்றுடன் சேர்த்து உண்டால், சுவை மிக அட்டகாசமாக இருக்கும்.

அன்னாசிப்பழ ரசம்

அன்னாசி பழத்தை பலருக்கு பிடிக்காது; காரணம் அதை உண்ட பின் வாயில் அரிப்பு உணர்வு ஏற்படுவதால் பலர் இதை விரும்புவதில்லை. ஆனால் இப்பழத்தைக் கொண்டு ரசம் செய்து உண்டால், மிகவும் ருசியாக இருக்கும். இந்த அன்னாசிப்பழ ரசத்தை சாதம், பீட் ரூட் பொறியல், இலை வடாம் இவற்றுடன் சேர்த்து உண்டால் அதன் சுவை மிகப்பிரமாதமாக இருக்கும்.

ஆரஞ்சுப்பழ ரசம்

ஆரஞ்சுப்பழம் தக்காளி மற்றும் புளி போன்றே புளிப்புச்சுவை நிறைந்தது; இதில் புளிப்பு சுவையோடு சேர்ந்து வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளன. இந்த ரசத்தை சாதம், காய்கறி சாம்பார், கேரட் – பீன்ஸ் பொறியல் உடன் உண்டால் சுவை நாவில் நாட்டியமாடும்.

பச்சை ஆப்பிள் ரசம்

பச்சை ஆப்பிளைக் கொண்டும் ரசம் தயாரிக்கலாம்; இந்த ரசம் புளிப்பு மற்றும் லேசான இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். இதனை சாதம், காய்ச்சிய மோர், பலாக்காய் பொறியல் உடன் சேர்த்து சாப்பிட்டால் தூள் பறக்கும்.

இளநீர் ரசம்

சாதாரண முறையில் தயாரிக்கப்படும் ரசத்தையே இளநீர் சேர்த்து தயாரித்தால் அது ரசத்துக்கு இளநீரின் சுவையையும் உடன் வழங்கும்; இது ஆரோக்கியமானதும் கூட. இந்த ரசத்தை சாதம், இலை வடாம், முட்டைக்கோஸ் பொறியல் உடன் சேர்த்து சாப்பிட சிறந்தது.

மாங்காய் ரசம்

இந்த ரசம் சில வீடுகளில் செய்யப்படும் ஒரு ரச வகையே! இந்த ரசத்தை மாங்காய் கொட்டை அல்லது மாங்காய் துண்டுகள் சேர்த்து தயாரிக்கலாம். இதை சாதம், பீட் ரூட் பொறியல், இலை வடாம் உடன் சேர்த்து உண்டால், சுவை மிகச்சிறப்பாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்