டிடியை கன்னத்தில் அறைந்த தீனா.! என்ன தம்பி தீனா…வைரல் வீடியோ உள்ளே.!
விஜய் டிவியில் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் போது டிடியை பளார்னு கன்னத்தில் அறைந்த தீனாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ‘ஸ்பீட் கெட் செட் கோ ‘என்ற விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் தமிழில் பவர் பாண்டி, நளதமயந்தி, விசில் , சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து தீனா என்றாலே பேச்சால் அடுத்தவர்கள் வாயை கட்டுபோடுபவர். ஆம், கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா. மேலும் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இவர் இருவருமே விஜய் டிவியில் என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் கலந்து கொண்ட போது தீனா அவரை அடித்த கேப்பில் டிடியை பளார் என்று கன்னத்தில் அரைந்துள்ளார். தற்போது அந்த புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
என்ன தம்பி தீனா.. ரொம்ப நாள் பிளான் போலயே?! ???????? #EnkittaModhaadhe முழுப்பகுதி – https://t.co/IpcQFgHh4p pic.twitter.com/9b8tB81kft
— Vijay Television (@vijaytelevision) June 30, 2020