உலகில் உள்ள அனைவருக்குமே சிரித்த முகம் என்பது பிடித்த ஒன்று தான். நாம் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது போல, பிறரும் நம்மை சிரித்த முகத்துடன் பார்க்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள். இப்படி தான் சிரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க தேவையில்லை. சிரிப்பு என்பது ஆழ்மனதில் இருந்து வரக்கூடிய ஒன்று.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற வாசகத்தை கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். அது எப்படி சிரித்தால் நோய் இல்லாமல் போகுமா என்று நமக்குள் சந்தேகம் வரலாம். ஆனால் உண்மையிலேயே சிரிப்பது நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் என மருத்துவர்களே கூறுகின்றனர். இன்று நம் சிரிப்பதால் என்னென்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நாம் வாய் விட்டு நன்றாக சிரிப்பதன் மூலமாக நமது இரத்த ஓட்டம் சரியாக இருக்கும் என கூறப்படுகிறது. நமது உடலில் இரத்த ஓட்டம் சரியாக இருந்தால், பல நோய்களை தவிர்க்கலாம். அதே போல சிரிப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருந்தாலே, நமது உடலில் நோய்கள் ஏற்படாது.
மேலும் நாம் சிரிப்பதன் மூலமாக உடலில் வைரஸ் எதிர்ப்பு செல்கள் வேகமாக உருவாகிறது எனவும் கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் நமது மன சோர்வு நீங்க வேண்டுமானால் சத்தமாக சிரித்தால் மன சோர்வு நீங்கி விடும் என கூறுகிறார்கள். அதற்காக நாம் சத்தமாக தனியாக சிரிக்க வேண்டாம்.
நீங்கள் ஏதேனும் ஒரு காமெடியான திரைப்படங்களை அல்லது புகைப்படங்களை பார்த்து உங்களது மனச்சோர்வை சிரித்து தவிர்த்துக் கொள்ளலாம். அதேபோல நாம் சிரிக்கும் பொழுது சுவாசம் ஆழமாக எடுக்கப்படுகிறதாம்.
அதாவது நாம் மூச்சை வெளியேற்ற கூடிய காலம் அதிகரிக்கிறது. இதனால் நமது உடலுக்கு அதிக அளவு ஆக்சிஜன் கிடைத்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் நீங்குவதற்கு வழிவகை செய்கிறது. இவ்வாறு நாம் சிரிப்பதன் மூலமாகவே நமது உடலுக்கு அதிக அளவில் நன்மைகள் கிடைக்கும். எனவே வாய் விட்டு சிரிப்போம், நோயின்றி வாழ்வோம்.
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…