சிரிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா…?

Default Image

உலகில் உள்ள அனைவருக்குமே சிரித்த முகம் என்பது பிடித்த ஒன்று தான். நாம் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது போல, பிறரும் நம்மை சிரித்த முகத்துடன் பார்க்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள். இப்படி தான் சிரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க தேவையில்லை. சிரிப்பு என்பது ஆழ்மனதில் இருந்து வரக்கூடிய ஒன்று.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற வாசகத்தை கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். அது எப்படி சிரித்தால் நோய் இல்லாமல் போகுமா என்று நமக்குள் சந்தேகம் வரலாம். ஆனால் உண்மையிலேயே சிரிப்பது நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் என மருத்துவர்களே  கூறுகின்றனர். இன்று நம் சிரிப்பதால் என்னென்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நாம் வாய் விட்டு நன்றாக சிரிப்பதன் மூலமாக நமது இரத்த ஓட்டம் சரியாக இருக்கும் என கூறப்படுகிறது. நமது உடலில் இரத்த ஓட்டம் சரியாக இருந்தால், பல நோய்களை தவிர்க்கலாம். அதே போல சிரிப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருந்தாலே, நமது உடலில் நோய்கள் ஏற்படாது.

மேலும் நாம் சிரிப்பதன் மூலமாக உடலில் வைரஸ் எதிர்ப்பு செல்கள் வேகமாக உருவாகிறது எனவும் கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் நமது மன சோர்வு நீங்க வேண்டுமானால் சத்தமாக சிரித்தால் மன சோர்வு நீங்கி விடும் என கூறுகிறார்கள். அதற்காக நாம் சத்தமாக தனியாக சிரிக்க வேண்டாம்.

நீங்கள் ஏதேனும் ஒரு காமெடியான திரைப்படங்களை அல்லது புகைப்படங்களை பார்த்து உங்களது மனச்சோர்வை சிரித்து தவிர்த்துக் கொள்ளலாம். அதேபோல நாம் சிரிக்கும் பொழுது சுவாசம் ஆழமாக எடுக்கப்படுகிறதாம்.

அதாவது நாம் மூச்சை வெளியேற்ற கூடிய காலம் அதிகரிக்கிறது. இதனால் நமது உடலுக்கு அதிக அளவு ஆக்சிஜன் கிடைத்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் நீங்குவதற்கு வழிவகை செய்கிறது. இவ்வாறு நாம் சிரிப்பதன் மூலமாகவே நமது உடலுக்கு அதிக அளவில் நன்மைகள் கிடைக்கும். எனவே வாய் விட்டு சிரிப்போம், நோயின்றி வாழ்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்