சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தினை குறித்து இயக்குநர் கார்த்திக் யோகி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
சந்தானம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், தில்லுக்கு துட்டு – 3 மற்றும் பிஸ்கோத். இதில் சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனரான கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் ஏழுமலையான் தயாரிக்கும் இந்தப் படத்தின் போஸ்ட்ர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மூன்று வேடங்களில் நடிக்கும் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் இயக்குனரான கார்த்திக் யோகி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இதில் சந்தானம் மிடில்கிளாஸ் பையன் மற்றும் விளையாட்டு வீரராக நடிப்பதாகவும், மற்றொரு கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் மூன்று வேடங்கள் என்பதால் ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொரு கதாபாத்திரத்திற்கு மாற குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் ஆகும் என்றும் கூறியுள்ளார். மேலும் சந்தானம் 48 முறையாவது ஒரு நாளில் கெட்டப் சேன்ஜ் செய்வார், சற்று கடினமாக தான் இருந்தது, இருப்பினும் சந்தானம் தனது கஷ்டத்தை பொருட்படுத்தாமல் முகம் சுளிக்காமல் மிக சிறப்பாக செய்தார் என்று கூறியுள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் டப்பிங் பணிகளை தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…