உங்களுக்கு தெரியுமா…? இலங்கையில் இப்படி ஒரு கிணறா…?
அம்பதோட்டை முதல் திருகோணமலை வரை கன்னியா உட்பட 10 இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் உள்ளது.
இலங்கையில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள் உள்ள இடங்களில் திருகோணமலையும் ஒன்று. திருகோணமலையில், திருக்கோணேஸ்வரம், திருகோணமலை கோட்டை, வெல்கம் விகாரு, துறைமுகம் மற்றும் கன்னியா வெந்நீர் ஊற்று போன்றவை புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள் ஆகும். தற்போது இந்த பதிவில், கன்னியா வெந்நீர் ஊற்று பற்றி பார்ப்போம்.
இலங்கையில், அம்பதோட்டை முதல் திருகோணமலை வரை கன்னியா உட்பட 10 இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் உள்ளது. இப்படி பல வெந்நீர் ஊற்றுகள் இருந்தாலும், கன்னியா வெந்நீர் ஊற்றுகள் சமய நம்பிக்கையிலும், விஞ்ஞான ரீதியிலும் பல சிறப்புக்களை பெற்றுள்ளது.
முக்கியமாக கன்னியாவில் காணப்படும் 7 வெந்நீர் ஊற்றுகளிலும் 7 வித்தியாசமான வெப்பநிலை காணப்படும். அதிலும் ஒரு அதிசயம் என்னவென்றால், 7 ஊற்றுகளுமே குளிப்பதற்கு ஏற்ற மிதமான வெப்பநிலையை கொண்டது ஆகும். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் அந்த பகுதியில் உள்ள மண், பாறைகளில் உள்ள அமைப்பு தான் இதற்கான காரணமாக இருக்கும் என்ற கூறப்படுகிறது.
மேலும், சில ஆராய்ச்சியாளர்கள் பாறை படிவங்களில் நடைபெறும் ரசாயன தாக்குதல் காரணமாக வெப்ப நீரூற்றுகள் பிறக்கிறது என கூறப்படுகிறது.