வெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்தாரா இசைஞானி.?
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகும் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல இயக்குனரான வெற்றிமாறன் தனுஷின் அசுரன் படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார் . வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுற்றி உருவாகும் இந்த படமானது ஜெயமோகனின் “துணைவன்” எனும் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்படவுள்ளது.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வளைகுடா நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கான சூழல் இல்லாத காரணத்தால் படத்தின் கதையில் மாற்றம் செய்து படப்பிடிப்பை சத்யமங்கலம் பகுதியில் அடுத்த வாரம் முதல் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.