கடலில் விழுந்ததா இந்தோனேசியா விமானம்? கடலில் பாகங்கள் கண்டெடுப்பு!

Default Image

ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் ஜாவா கடற்பரப்பில் மாயமடைந்ததை தொடர்ந்து, விமானத்தின் சிதைந்த பாகங்களை கடலில் கண்டெத்துள்ளனர். இதனால் விமானம் கடலில் விழுந்தது, ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், 62 பயணிகளுடன் ஜகார்தாவில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம், புறப்பட 4 ஆம் நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, விமானம் மறைந்தது.

SJ182 என்று அழைக்கப்படும் அந்த விமானம், “போயிங் 737” மாடல் என்றும், அந்நாட்டு நேரப்படி காலை 07:40 மணிக்கு ஜாவா கடற்பரப்பு வழியாக 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது ரேடாருடனான தொடர்பை இழந்து மாயமானதால், ஜாவா கடற்பரப்பில் விழுந்ததாக சந்தேக்கம் எழுந்ததை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், ஜாவா கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்று மீனவர்கள், கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்களை கண்டெத்துள்ளனர். இதனால் விமானம் கடலில் விழுந்தது, ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விமானத்தை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. ஆயினும், கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த பாகங்கள், மாயமான விமானத்தின் பாகங்கள் தானா? என்பது குறித்து விசாரணை
நடைபெற்று வருகிறது. மேலும், பயணம் செய்தவர்களின் நிலை குறித்து தற்பொழுதுவரை எந்தொரு தகவல்களும் வெளிவரவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்