#Breaking:”இது வதந்தி;ஆயுதங்களை நாங்கள் கீழே போடப் போவதில்லை” – உக்ரைன் அதிபர்
உக்ரைன் ராணுவத்தை தான் சரணடைய சொல்லவில்லை ;அவ்வாறு வெளியான செய்தி வதந்தி என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி முன்னேறி வரும் ரஷ்ய படைகள் அதனைக் கைப்பற்றுவதற்காக இன்று தாக்குதல் நடத்தக் கூடும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னதாக தெரிவித்திருந்தார்.மேலும், உக்ரைனின் கதி என்ன ஆகும் என்பது இன்று தெரிந்து விடும் எனவும் கூறியிருந்தார்.
அதன்படி,உக்ரைன் தலைநகர் கீவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 3 வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதன்காரணமாக,உக்ரைன் – ரஷ்யா இடையே கடும் சண்டை நடைபெறும் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,உக்ரைன் ராணுவத்தை தான் சரணடைய சொன்னதாக வெளியான செய்தி வதந்தி எனவும்,அவ்வாறு தான் கூறவில்லை எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,” இது எங்கள் நாடு,எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாங்கள் போராடுகிறோம். ரஷ்யா தாக்குதலை நிறுத்தாத வரை நாங்கள் ஆயுதத்தை கீழே போடப் போவதில்லை” என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், நாட்டை விட்டுத்தர தாங்கள் தயாராக இல்லை எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
Не вірте фейкам. pic.twitter.com/wiLqmCuz1p
— Володимир Зеленський (@ZelenskyyUa) February 26, 2022