மீண்டும் காதலில் விழுந்தாரா பிக்பாஸ் சனம் ஷெட்டி.? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு.!
பிக்பாஸ் மூலம் பிரபலமான சனம் ஷெட்டி தற்போது மீண்டும் காதல் செய்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு,இந்தி என பல மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து பிரபல நடிகையாக திகழ்பவர் சனம் ஷெட்டி.சமீபத்தில் இவர் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார் .
ஏற்கனவே இவர் பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக இருந்த தர்ஷனை காதலித்ததும் , திருமணம் நிச்சயமானதும் , பின்னர் தர்ஷன் இவரை திருமணம் செய்ய இயலாது என்று கூறியதால் அது நீதிமன்றம் வரை சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்த நிலையில் சனம் ஷெட்டி காதலர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு அனைவரிடத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பகிர்ந்த பதிவில்,ஒருவரது கையைப் பிடித்தபடி அவர் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.இவரது இந்த பதிவினை தொடர்ந்து ரசிகர்கள் பலர் கமென்ட் வாயிலாக பலர் வாழ்த்துக்களை தெரிவித்தும் , சிலர் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று கேள்வி கேட்டும் ,மோன் என்பது யார் என்று கேட்டும் வருகின்றனர் . இந்த பதிவிலிருந்து சனம் ஷெட்டி மீண்டும் காதலில் விழுந்து விட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
View this post on Instagram