நடிகை காஜல் அகர்வால் ஹனிமூனிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2 , சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இந்த புதுமண தம்பதியினர் திருமணம் முடிந்த ஒரு வாரம் கழித்து மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றனர் . அங்கு இந்திய பெருங்கடலில் கடல் மட்டத்திலிருந்து 16 அடிக்கு கீழே நீருருள் இருக்கும் ஹோட்டலான தி மூராகாவில் இருவரும் தங்கியிருந்தனர் . அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதும் , அது வைரலானதும் குறிப்பிடத்தக்கது . இந்த ஹோட்டலில் ஒரு இரவுக்கு கட்டணம் ஐம்பதாயிரம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் முப்பத்தெட்டு லட்சம் என்று கூறப்படுகிறது . அப்போது 10 நாட்களுக்கு பிற செலவுகள் உட்பட அனைத்திற்கு 5 கோடி வரை செலவாகும் என்று பாலிவுட் ஊடகங்கள் கூறியுள்ளது.
இந்த ஹோட்டலில் காஜலும் , அவரது கணவரும் 4 நாள் தங்கியதாகவும், அதற்கு அவர் பல கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது . ஆனால் இது குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…