வாழைப்பூ சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகுமா….?
வாழைப்பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு உணவு வகை தான். இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. வாழைப்பூவில் துவர்ப்புசத்து அதிகம் உள்ளது. அதனால் வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் வைட்டமின் பி கிடைக்கிறது. துவர்ப்பு சத்துக்களால் பல வியாதிகள் குணமாகும்.
இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் :
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கின்றது. இரத்தம் சுத்தமாகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. இதனால் இரத்தத்தில் ஆக்சிஜன் வாயு அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான இருப்புசத்தை கொடுக்கிறது. இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது.
சர்க்கரை நோய் :
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளை கரைத்து வெளியேற்ற வாழைப்பூ உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை அளவு குறைகிறது.
வயிற்று பிரச்சனைகள் :
வாழைப்பூவை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால் வயிற்று புண்கள் ஆறும். செரிமான தன்மை அதிகமாகும். வாழைப்பூ மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. வாய் புண்ணை விரைவில் ஆற்றும் தன்மை உடையது.
பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகள் :
வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.