குரங்குகளுக்கு சர்க்கரை நோய்! சுற்றுலா பயணிகளுக்கு உணவளிக்க தடை!
குரங்குகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதால், பயணிகளுக்கு உணவளிக்க தடை.
இன்று மனிதர்களை பொறுத்தவரையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சர்க்கரை நோய் ஏற்படுவதுண்டு. இந்த நோய் ஏற்படுவது தற்போது சகஜமாகியுள்ள நிலையில், தற்போது விலங்குகளுக்கும் இந்த நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சேலம் ஏற்காடு மலையில் குரங்குகளுக்கு உணவளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உண்ணும் திண்பண்டங்களை குரங்குகளுக்கு வழங்குவதால், குரங்குகளுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் வருவதாகவும், மேலும் குரங்குகள் இயற்கையாக உணவுகளை தேடாமல் மனிதனிடம் கையேந்தும் நிலைக்கு வந்துள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.