துருவ் விக்ரம் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு 'புகை'யால் வந்த புது பிரச்சனை!
விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு நன்றாக இருப்பதாலும், படத்தின் காட்சிகளும் நன்றாக வந்திருப்பதாலும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிகமான புகை பிடிக்கும் காட்சிகள் மது குடிக்கும் காட்சிகள் இப்படத்தில் உள்ளது. இதனால் இவருக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதேபோல, பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் அரவிற்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை ராதிகா சரத்குமார், அந்த படத்தில் சுருட்டு பிடிக்கும் புகைப்படம் வெளியானது. அதனால் நடிகை ராதிகா சரத்குமாருக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தை அமர்க்களம், அட்டகாசம் படங்களை இயக்கிய சரண் இயக்கியுள்ளார்.