நடிகர் துருவ் விக்ரம் அடுத்ததாக பரியேறு பெருமாள் படத்தினை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம் .ஆனால் அந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை .அதனை தொடர்ந்து துருவ் விக்ரம் தனது தந்தையுடன் இணைந்து நடிக்கவுள்ளதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் துருவ் விக்ரமுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் துருவ் விக்ரம் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான மாரி செல்வராஜ் தற்போது தனுஷின் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார் . இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ள கர்ணன் படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தினையும் பரியேறும் பெருமாள் படத்தினை தயாரித்த இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது .மாரி செல்வராஜ் கர்ணன் படத்தினையும் ,துருவ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தினையும் முடித்து விட்டு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே பா.ரஞ்சித் அளித்த பேட்டியில் அடுத்த ஆண்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் படத்தினை தயாரிக்க உள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…