வங்கதேச வீரரின் வீட்டின் சுவற்றில் டோனியின் டி-சர்ட் வைரலாகும் புகைப்படம் !!!
- வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் திருமண நிச்சயதார்த்தம் அவரது வீட்டில் நடந்தது.
- வீட்டின் சுவற்றில் டோனியின் டி-சர்ட் Frame செய்யப்பட்ட புகைப்படம் இருந்தது.
வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் இழந்தது. இந்நிலையில் வங்கதேச வீரர்கள் தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் மசூதிக்கு சென்ற போது அதற்கு முன்னர் அங்கு துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தால் சுதாரித்த வீரர்கள் ஒரு வழியாக தப்பி வந்தனர். இந்த துப்பாக்கி தாக்குதலில் 49 பேர் பலியாகினர்.
இந்நிலையில் வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் திருமண நிச்சயதார்த்தம் அவரது வீட்டில் நடந்தது. சபீர் ரஹ்மான் வீட்டின் சுவற்றில் டோனியின் டி-சர்ட் Frame செய்யப்பட்ட புகைப்படம் இருந்தது.
இதனால் சபீர் ரஹ்மான் , டோனியின் ரசிகர் எனக் கூறி அவரது நிச்சயதார்த்த புகைப்படத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.