கடைசி 16 பந்தில் தோனி ஸ்ட்ரைக்ரேட் 180 ஆக உயர்ந்தது!
நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில்143 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,விக்கெட் கீப்பருமான தோனி 6-வது விக்கெட்டைக்கு களமிறங்கினர்.தோனி களமிறங்கி தொடக்கத்தில் இருந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால் தோனி பொறுமையாக விளையாடியது ரசிகர்களின் மத்தியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியது.நிதானமாக விளையாடிய தோனி முதல் 45 பந்தில் வெறும் 26 ரன்கள் எடுத்ததால் தோனியின் ஸ்ட்ரைக்ரேட் 57.78 இருந்தது.
பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கடைசி 16 பந்தில் தோனி நிறைவேற்றினர்.தோனி கடைசி 16 பந்தில் 30 ரன்கள் குவித்தார் இதன் மூலம் அவரின் ஸ்ட்ரைக்ரேட் – 187.50 உயர்ந்தது.இப்போட்டியில் டோனி 61பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் 45 பந்துகள்: 26 ரன்கள் (ஸ்ட்ரைக்ரேட் – 57.78)
அடுத்த 16 பந்துகள்: 30 ரன்கள் ( ஸ்ட்ரைக்ரேட் – 187.50)