ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகிவரும் தோனியின் கையுறை
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் தென்னாபிரிக்கா,இந்திய அணி மோதியது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது தென்னாபிரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் அப்போட்டியில் தோனி கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய கையுறை தான் இரண்டு நாள்களான சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அவர் பயன்படுத்திய கையுறையில் இந்திய பாராமிலிட்டரி படையின் முத்திரையான “பாலிதான்” இருந்தது. அந்த முத்திரையின் அர்த்தம் தியாகம் செய்வது என்பது பொருள்.
இதனால் ரசிகர்கள் தோனியின் இந்த செயலுக்கு ட்விட்டரில் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் ராணுவ முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த தோனிக்கு தடை விதிக்குமாறு பிசிசிஐக்கு , சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரிக்கை வைத்தது.
ஆனால் ட்விட்டரில் நேற்றில் இருந்து “DhoniKeepTheGlove” ஹாஸ் டேக் என்ற மூலம் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.தற்போது அந்த ஹாஸ் டேக் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.