இந்திய அணி சிறந்து விளங்க தோனியின் அனுபவமே காரணம் -மலிங்கா
நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவி அரையிறுதிக்கு தகுதியை பெற்று உள்ளது.இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியை இலங்கை அணியுடன் மோத உள்ளது.
இந்த வருட உலக்கோப்பையில் அதிகமாக விமர்சத்திற்கு உள்ளனவர் தோனி.இவர் நடப்பு உலக்கோப்பை உடன் தனது ஓய்வை அறிவிப்பதாக தகவல் வெளியானது.இந்நிலையில் இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மலிங்கா தோனியை பற்றி கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில் கூறுவது , தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் .கடந்த 10 வருடங்களாக சர்வதேச போட்டிகளில் சிறந்த பினிஷராக வலம் வருகிறார்.இவரது அனுபவம் இந்திய அணிக்கு முக்கியமான நேரங்களில் கைகொடுக்கும். அதனாலதான் இந்திய அணி சிறந்த அணியாக விளங்கி வருகிறது.
மேலும் இளம் வீரர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் இப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இரண்டு ஆண்டுகள் இருந்து கற்று கொடுக்க வேண்டும் என கூறினார்.