ராணுவ முத்திரை பதித்த கையுறையோடு தோனி..! விளையாடுவது குறித்து ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்
உலககோப்பையில் தோனி கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய கையுறை சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அவர் பயன்படுத்திய கையுறையில் இந்திய பாராமிலிட்டரி படையின் முத்திரையான “பாலிதான்” இருந்தது.தோனியின் இந்த செயலுக்கு ட்விட்டரில் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.
தோனி கையுறையில் இருக்கும் ராணுவ முத்திரை நீக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ஐசிசி கோரிக்கை வைத்தது.இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் பிசிசிஐ தோனி, ராணுவ முத்திரை பதித்த(பாலி) கையுறைகளை பயன்படுத்த ஐசிசிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு தலைவர் விநோத் ராய், பேட்டியளித்தார் அப்போது தோனி பயன்படுத்திய கையுறைகளில் உள்ள முத்திரை ஆனது மதம் அல்லது அரசியலை குறிப்பது அல்ல இதனை ஐசிசி கருத்தில் கொண்டு வரும் போட்டிகளில் அவர் ராணுவ முத்திரை பதித்த கையுறைகளையே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் அனுப்பி உள்ளது.சமூக வளைதலங்களில் தோனியின் கையுறைக்கு ஆதரவாக #IndiaWithDhoni , #DhoniKeepTheGlove என்று ஓட்டு மொத்த தேசமே பொங்கி எழுந்துள்ளது குறிப்பிடத்தகது.
மேலும் இந்திய அளவில் ட்ரண்டிங்கில் #IndiaWithDhoni ஹேஷ்டேக் முதல் இடம் பிடித்துள்ளது