பல சர்ச்சைக்கு பிறகு ராணுவ முத்திரையை நீக்கிய தோனி !
நேற்றைய போட்டியில் இந்திய அணி ,ஆஸ்திரேலியா அணி உடன் மோதியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 316 ரன் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதியது.இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி ராணுவ முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராணுவ முத்திரையுடன் கூடிய கையுறையை பயன்படுத்தக்கூடாது அது விதிமுறைக்கு எதிரானது என ஐ.சி.சி. கண்டனம் தெரிவித்தது.இதனை தொடர்ந்து நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டோனி பயன்படுத்திய கையுறையில் முத்திரையை நீக்கி விட்டார்.