தோனி இடத்தை எந்த வீரரையும் கொண்டு நிரப்ப முடியாது!
தற்போது தோனிக்கு 36 வயதாகியும் கூட, 26 வயதான வீரர்களால் கூட உடற்தகுதியில் அவரை தோற்கடிக்க முடியாது என்று ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.மற்ற வீரர்கள் இரண்டு ரன்கள் ஓடி எடுப்பதற்குள், தோனி மூன்று ரன்கள் எடுத்து விடுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழ்ந்துள்ளார்..
இந்திய அணியில் தோனி வகிக்கும் விக்கெட் கீப்பர் பொறுப்பை வேறு எந்த வீரரையும் கொண்டு நிரப்ப முடியாது என்று தெரிவித்துள்ள அவர், தோனியை விமர்சிப்பவர்கள், 36 வயதில் தாங்கள் எப்படி இருந்தோம் என்பதை கண்ணாடி முன் நின்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
source: dinasuvadu.com