ஒருநாள் போட்டியில் இரண்டாவது முறையாக ஸ்டெம் அவுட் ஆன தோனி!
நேற்றைய போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் , விக்கெட் கீப்பருமான தோனி 5 -வது விக்கெட்க்கு களமிறங்கினர்.நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை குவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் நேற்றைய போட்டியில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போல நடக்கவில்லை டோனி மிகவும் பொறுமையாகவும் , நிதானமாகயும் விளையாடினர்.நேற்று டோனி 52 பந்திற்கு 28 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இந்நிலையில் டோனி இதுவரை நடந்த ஒருநாள் போட்டியில் ஒருமுறை மட்டுமே ஸ்டெம் அவுட் ஆகி இருந்தார்.ஆனால் நேற்றைய போட்டியில் இரண்டாவது முறையாக ஸ்டெம் அவுட் ஆனார். இந்த இரண்டு ஸ்டெம் அவுட்மே உலகக் கோப்பையில் நடந்த போட்டியில் தான் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
WI (2011)
Afg (2019)*