தோனி கிரிக்கெட் விளையாடத்தானே போயிருக்காரு போருக்கு ஒன்னும் போகலயே- பாகிஸ்தான் அமைச்சர்
கடந்த 05-ம் தேதி நடந்த போட்டியில் தென்னாபிரிக்கா,இந்திய அணி மோதியது. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் தோனி கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய கையுறை தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அவர் பயன்படுத்திய கையுறையில் இந்திய பாராமிலிட்டரி படையின் முத்திரையான “பாலிதான்” உள்ளது. அந்த முத்திரையின் அர்த்தம் தியாகம் செய்வது என்பது பொருள்.
தோனியின் இந்த செயலுக்கு ட்விட்டரில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனி கையுறையில் இருக்கும் ராணுவ முத்திரை நீக்க வேண்டும் என பிசிசிஐக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தோனியின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் அறிவியல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஃபவட் சௌத்ரி தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் “தோனி கிரிக்கெட் விளையாடத்தானே போயிருக்காரு மஹாபாரதம் போருக்கு போகல அல்ல ” தேவையில்லாத விவாதங்களை இந்திய மீடியா செய்து வருகிறது என குற்றம் சாட்டினார்.