தோனி பேட்டிங் பலவீனம் பற்றி பரப்பி வீடாதீர்கள் ஹசி..!வாயை அடைக்கும் பிசிசிஐ..!

Default Image

இந்திய அணி முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கிப்பர் ஆன தோனியின் பேட்டிங் பலவீனத்தை பற்றி ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களிடம் பகிரந்தால் அது இந்திய அணிக்கு தான் ஆபத்து என்று பிசிசிஐ கவலை தெரிவித்ததுள்ளது.
Image result for Mike hussey DHONI
இந்நிலையில் அதனை பகிர மாட்டேன் என்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியளாரக இருந்து வரும் மைக் ஹசி கூறி உள்ளார்.
இந்திய அணி உலககோப்பையில் பங்கு கொண்டு இங்கிலாந்தில் விளையாடி வருகிறது.இந்நிலையில் தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்று வெற்றி கணக்கோடு தனது போட்டியை துவங்கியது.
Related image
ஜூன் 9 ல் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு அவ்வபோது  அறிவுரைகள் அளித்து வரும் மைக் ஹசி பற்றி பிசிசிஐ கவலை தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியளராக ஹசி  இருப்பதால் கண்டிப்பாக ஒவ்வொரு வீரரின் பலவீனம் பற்றி உறுதியாக தெரியும் என்பதால் அதில் தோனியின் பேட்டிங் பலவீனம் பற்றி ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடல் கொண்டால் அது இந்திய அணிக்கு பெறும் இழப்பாக கூடும் என்று தனது கவலையை பிசிசிஐ தெரிவித்தது.
Image result for Mikehussey DHONI
இதற்கு பதிலளித்து பேசிய ஹசி தோனியின் பேட்டிங் பலவீனம் பற்றி ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்த ஹசி தோனியிடம் குறிப்பிட்ட எந்தவொரு பலவீனமும் இல்லை ஒரு வேளை அப்படி இருந்தாலும் அதனை நான் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டேன்.
மேலும் தன்னுடன் மோதும் அணிகளை பற்றி ஒவ்வொரு அணியும் அறிந்து வைத்திருக்கும்.அதே போல் ஆஸ்திரேலியாவும் தோனிக்கு திட்டம் வகுத்திற்கும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்