நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து தோனி படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நஹர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களைடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே தோனி படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நஹர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மும்பையில் உள்ள கோரேகான் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சந்தீப் நஹர் தனது வீட்டிலையே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு ,தனது தொழில்துறை பிரச்சினை மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாக அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் தனது இந்த முடிவிற்கு மனைவியை குறை கூற கூடாது என்றும் வீடியோவில் கூறியுள்ளார்.ஒரே படத்தில் நடித்த இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நடிகரின் தற்கொலைக்கு பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…