முதல் இடத்தில் இருக்கும் தவான்,ரோஹித் ஷர்மா!
நேற்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 316 ரன்கள் எடுத்து 36 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகார் தவான்,ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கி பட்டைய கிளப்பினர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிக ரன்கள் அடித்த கூட்டணியில் இந்திய அணி ஷிகார் தவான்,ரோஹித் ஷர்மா இவர்களின் கூட்டணி முதல் இடத்தில் உள்ளது.
இதுவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இவர்கள் கூட்டணியில் 1227 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளனர்.
1227 – Rohit Sharma / Shikhar Dhawan
1152 – Gordon Greenidge/ Desmond Haynes
827 – Sourav Ganguly /sachin