தவான் தனது ட்விட்டரில் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

Default Image

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது  போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி உடன் மோதியது.அப்போட்டியில் அப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் வீசிய பந்தில் தவானுக்கு இடது கை பெரும் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.அதனால் அவருக்கு பதிலாக அப்போட்டியில்  ஜடேஜா களமிறங்கினர். அப்போது தவான் மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட இவர் மைதானத்தில் இருந்தால் நிச்சயம் அடுத்த போட்டியில் தவான் கண்டிப்பாக கலந்து கொள்வர் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது பிசிசிஐ தவானை உலகக்கோப்பையில் இருந்து நீக்க அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் தவானுக்கு காயம் சரியாக ஆகாத நிலையில் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.உலகக்கோப்பையில் இருந்து தவான் விலகியதை தொடர்ந்து பல வீரர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.


இந்நிலையில் தாவன் தனது ட்விட்டரில் ஒரு ஒரு வீடியோ ஒன்று பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் என் மீது அன்பு வைத்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்டு விட்டது. நம் நாட்டிற்காக உலகக்கோப்பையில் விளையாட ஆசைப்படுகிறேன்.
ஆனால் காயம் காரணமாக  திரும்ப வேண்டிய நிலைமை வந்துவிட்டது. நம் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றுவார்கள் என நம்புகிறேன் மேலும் அவர்களுக்கு உங்கள் ஆதரவை தரவேண்டும் “எனவும் கூறினர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்