தர்மத்தை நிலைநாட்டும் ஆட்டம் ஆரம்பம் – ருத்ரதாண்டவம் டிரெய்லர் அப்டேட்.!

ருத்ர தாண்டவம் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 05:06 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார்.
திரௌபதி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் அடுத்ததாக “ருத்ர தாண்டவம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திலும் நடிகர் ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடிக்கிறார்.
இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இசையமைப்பாளர் ஜிபின் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கடந்த மாதம் முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “ருத்ர தாண்டவம்” படத்தின் டிரெய்லர் நாளை மாலை 05:06 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் ஆட்டம் ஆரம்பம்.. #ருத்ரதாண்டவம் #RudraThandavam..
நாளை மாலை 05:06 மணிக்கு ட்ரெய்லர் வெளியிடப்படும்.. @richardrishi @menongautham @DharshaGupta @jubinmusic @ProBhuvan @Gmfilmcorporat1@7GFilmsSiva@ayngaran_offl pic.twitter.com/mQ0QQ6tH1f— Mohan G Kshatriyan (@mohandreamer) August 23, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025