தனுஷ் நடிக்கவுள்ள தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்த இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் “D43” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார்.
அதன் பின் தனுஷ் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.மார்க் க்ரேனியின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட உள்ள ‘தி க்ரே மேன்’ படத்தினை அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கவுள்ளனர். ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் ஹீரோக்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகவுள்ள இந்த படத்தில் ரயான் கோஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற சிஐஏ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் ,அவரை பணத்திற்காக கொலை செய்யவிருக்கும் கூட்டத்தின் தலைவனாக தனுஷ் நடிக்க உள்ளதாகவும் மார்க் க்ரேனி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதுவரை படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் இன்று முதல் தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த வகையில் தி க்ரே மேன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பானது இன்று முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…