ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இப்போதும் டிரெண்டிங்கில் உள்ளது .
கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் சமீபத்தில் கூட இந்த படத்திலுள்ள ‘காத்தோடு’ என்ற பாடலை தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடியுள்ளதாகவும், அதனை கபிலன் எழுதியுள்ளதாகவும், விரைவில் அந்த பாடல் வெளிவரும் என்றும் ஜிவி கூறியிருந்தார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. நேற்றைய முன்தினம் இந்த படத்திலுள்ள ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் வெளியாகியது. கேட்க இனிமையாகவுள்ள இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. பல இதயங்களை கொள்ளை கொண்ட இந்த பாடல் 24 மணி நேரத்திற்கு பின்னரும் யூடுபில் நம்பர் 1 இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் உள்ளதோடு, 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது .
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…