தனது 19 வருட சினிமா பயணத்தில் தனுஷ் படைத்த புதிய சாதனை..!!
கர்ணன் திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகம் முழுவதும் 11 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் தனுஷ். தற்போது தி க்ரே மேன், D43, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவர் 2, வடசென்னை 2 போன்ற பல திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். இந்த நிலையில் இவரது நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த விமர்சனத்தை பெற்று வருகிறது.
அருமையான கதையை வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும், மிகவும் அருமையாக படம் உள்ளது என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது 19 வருட தனது சினிமா பயணத்தில் நடிகர் தனுஷிற்கு இந்த கர்ணன் திரைப்படம் புதிய சாதனையை படைத்தது கொடுத்துள்ளது.
ஆம், கர்ணன் திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகம் முழுவதும் 11 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் கர்ணன் படத்தை போல் வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. படத்திற்கு படம் தனுஷிற்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டேதான் செல்கிறார்கள். இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்யுமா…?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.