இறுதிக்கட்டத்தில் #D43..!! வைரலாகும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம்.!

Default Image

D43 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகைமாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்திற்கான 70% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூலை 28- ஆம் தேதி தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் D43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து வருவதாக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh