உலகரங்கில் தனுஷின் “கர்ணன்”..! – மாரி செல்வராஜ் ட்வீட்.!
ஜெர்மனியின்-யில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் ‘கர்ணன்‘ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிங்கர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, நட்டி, கௌரி கிஷன், லால் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் நடைபெறவுள்ள New Generations – Independent Indian Film Festival திரைப்பட விழாவில் “கர்ணன்” திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இதனை இயக்குனர் மாரிசெல்வராஜ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
#Karnan for the New Generations- Independent Indian Film Festival, Frankfurt. ????@theVcreations @dhanushkraja @Music_Santhosh @thenieswar @EditorSelva @NewGenFFM pic.twitter.com/ttWZwhKjEb
— Mari Selvaraj (@mari_selvaraj) September 14, 2021
இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.